கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி யுனிசெப், ஐரோப்பிய ஒன்றியம் 9 மில்லியன் யூரோ நிதி உதவி
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு 9 மில்லியன் யூரோவை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், யுனிசெப் அமைப்பும் முன்வந்துள்ளன. ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்’ எனும் மூன்று வருடத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 18 பாடசாலைகள் கட்டப்பட விருப்பதுடன், 10 சுகாதார மையங்களும் புனரமைக்கப்படவுள்ளன.
அதுமாத்திரமன்றி இரண்டு சிறுவர் சிகிச்சை மற்றும் மகபேறு காலத்திற்குப் பின்னரான சிகிச்சை நிலையங்கள், சுகாதார மருத்துவ அதிகாரி களுக்கான அலுவலகம், மருத்துவர் விடுதிகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் என்பன புனரமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக ஆயிரம் வீடுகளுக்கு மலசல கூடங்களை நிர்மாணித் தல், 250 வீடுகளுக்கு கிணறுகளை அமைத்தல் 370 நீர் விநியோக இடங்களை அமைத்தல், 42 பாடசாலைகள் மற்றும் 16 கிராமிய சுகாதார நிலையங்களுக்குத் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான நிகழ்வு ஒன்று அண்மையில் மூதூர் ஸ்ரீ செண்பகா மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளு மன்றத்தின் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வுகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் தாராளமான நன்கொடைகளை வழங்கி வருவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அஸா ஹொசைனி இந்நிகழ்வில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply