விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு தளர்ந்து வருவதாக இலங்கை: இராணுவத்தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா

வடக்கே வன்னிப் பகுதியில் விடுதலைப்புலிகளை, இலங்கைப் படையினர் ஒரு மூலைக்குத் தள்ளி சுற்றி வளைத்திருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு தளர்ந்து வருவதாகவும், இலங்கை இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அண்மைய வாரங்களில், இராணுவத்தினர் முன்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாக நிலப்பரப்பை கைப்பற்றி வருவதாகவும், விடுதலைப்புலிகளின் இறுதி நிலையான முல்லைத்தீவு மாவட்டத்தை அவர்கள் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் முல்லைத்தீவு பீரங்கி நிலைகள் உட்பட பல நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற இலங்கை இராணுவத்தினர் ஞாயிற்றுகிழமை அங்கு விடுதலைப்புலிகளின் 12 சடலங்களையும், இராணுவ தளபாடங்களையும் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply