யுத்தத்தை காரணம் காட்டி அபிவிருத்தியை நிறுத்தும் நோக்கம் அரசுக்கு கிடையாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
யுத்தத்தைக் காரணம் காட்டி அபிவிருத்தியை நிறுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. சகல மக்களும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழக்கூடிய நாட்டை விரைவாகக் கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெற்றிலைக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இன்றைய பயணத்தைத் தொடர் வதற்கு அங்கீகாரம் வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி அதனை முழு உலகிற்கும் வெளிப்படுத்தும் தேர்தலாக இது அமையுமெனவும் தெரிவித்தார்.
அபிவிருத்தியை நோக்கிய அரசாங்கத்தின் பயணம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று பிற்பகல் மாத்தளை மாவட்டத்தின் நாவுல்ல பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரத்ன, ஏ. எல். எம். அதாவுல்லா, ஜனக பண்டார தென்னக்கோன், மஹிந்த அமரவீர, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரோஹண திசாநாயக்க உட்பட பல அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
வரலாற்றில் பெருவாரியான வெற்றிகளை ஈட்டிவரும் காலகட்டமிது. இத்தகைய தருணத்தில் இரண்டு மாகாண மக்களும் வெற்றிலைக்கு வாக்களித்து அரசின் பயணத்தை வெளியுலகிற்கு உணர்த்துதல் அவசியம். அதனால் வெற்றிலைச் சின்னத்துக்கு மட்டும் வாக்களித்துவிட்டு விட்டுவிடாமல் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகள் மூன்றையும் மூவருக்கு வழங்க வேண்டியது மிக மிக அவசியம்.
பயங்கரவாதத்தினால் சீரழிந்திருந்த நாட்டை மீட்டெடுக்க மாவிலாறிலிருந்து தொடங்கிய மனிதாபி மான நடவடிக்கைகள் இன்று புலிகளை கடலில் தள்ளும் நிலைவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலிகளை முழு மையாகக் கடலில் தள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அந்நாள் விரைவில் மலரும். அத்தினத்தில் சுதந்திரத்தின் மகிழ்ச்சியை சகலரும் கொண்டாடும் அதேவேளை, அதனைப் பெற்றுத் தந்த படைவீரர்களை கெளரவிக்கும் வகையில் உங்கள் வீடுகளில் சிங்கக்கொடியை ஏற்றுங்கள்.
கண்டியில் 6,500 ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எம்மோடு இணைந்தனர். மாத்தளையிலும் இணைவர். இந்தப் பிரசார மேடையில் ஜே. வி. பி.யில் போட்டியிடும் அபேட்சகரான சரத் விஜேசிங்க எம்முடன் இணைந்துகொண்டுள்ளார். இது எமது பெரு வெற்றியினை நிரூபிக்கின்றது.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை சகல கிராமங்களின் குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் உங்கள் கிராமங்க ளும் அபிவிருத்தி காண்பது உறுதி. மாத்தளை மாவட் டத்தில் மாத்திரம் 300 மில்லியன் ரூபா செலவில் அபி விருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன.
அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொறுப்பு எங்களு டையது. அதேபோன்று ஆதரவு வழங்கவேண்டியதும் உங்களது பொறுப்பாகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவு தாருங்கள். உங்களின் விருப்பு வாக்குகளையும் அளிக்கத் தவறாதீர்கள்.
இத்தேர்தலில் நீங்கள் வழங்கும் ஆதரவு ஐக்கிய இலங் கையை உருவாக்கவும் அபிவிருத்திப் பயணத்தைத் தொடரவும் மிக முக்கியமானதாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் 13 அபேட்சகர்களும் ஜனாதிபதியிடம் தமது உறுதிமொழியினைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply