இடம்பெயரும் மக்கள் போக்குவரத்துக்கு மேலும் ஐந்து பஸ்கள்: கிழக்குக்கு பத்து பஸ்கள்
வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்களுக்கான போக்குவரத்துக்காக மேலும் ஐந்து பஸ்கள் கொழும்பிலிருந்து இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தத் தகவலை இலங்கை போக்குவரத்துச் சபையின் பதில் தலைவர் தம்மிக ஹேவாபத்திரன தெரிவித்தார். இந்த புதிய ஐந்து பஸ்களும் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இடம்பெயரும் மக்களின் போக்குவரத்து நலன் கருதி அண்மையில் பத்து பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு பஸ் டிப்போக்களுக்கு 26 புதிய பஸ்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply