ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி நாளை இலங்கை வருகின்றார்
ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி நாளை இலங்கை வருகிறாரென ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை 21ம் திகதி இலங்கை வரும் அகாஸி எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசவுள்ள அகாஸி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முன்னெடுப்புக்களை ஊக்கப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையில் நிற்கும் நாட்களில் திருகோணமலை, வவுனியா பகுதிக ளுக்கும் விஜயம் செய்யவுள்ள அகாஸி தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply