பிரபாகரன் மலேசியாவுக்குள் தப்பி வருவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: எல்லைப்புற பாதுகாப்பும் அதிகரிப்பு

வடக்கில் இராணுவத்தினருடன் இடம் பெறும் மோதலில் புலிகள். தோல்வியடைந்து வருவதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது நாட்டுக்குத் தப்பிவரக் கூடுமென்பதற்காக மலேசிய அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மலேசிய பொலிஸ்மா அதிபர் மூஸா ஹஸன் செய்திப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவிக்கையில்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மலேசியாவுக்கோ அல்லது தாய்லாந்துக்கோ தப்பிச் செல்லும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நாம் எமது நாட்டில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளோம்.

மலேசியாவின் எல்லைப் பகுதி அனைத்திலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன.
உள்ளுர் உளவுத்துறை வலையமைப்பின் செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply