வன்னியில் தொடரும் மோதல்களில் படுகாயமடைந்த மேலும் 51 பேர் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்

வன்னியில் தொடரும் மோதல்களில் படுகாயமடைந்த மேலும் 51 பேர் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.   
இவர்கள் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.மோதல்களில் கால்களை இழந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள்  சிறுவர்கள், முதியவர்கள் பலர் இவ்வாறு அழைத்துவரப்பட்டனர். வன்னியிலிருந்து காயமடைந்த பலர் வவுனியாவுக்கு இன்று அழைத்துவரப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காலை முதல் வவுனியா வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டிருந்ததுடன், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 16 நோயாளர் காவுவண்டிகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் வன்னியிலிருந்து படுகாயமடைந்த 51 பேர் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். காயமடைந்தவர்களில் 20 பேர் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியர் எனவும், எஞ்சியவர்களில் 12 ஆண்களும், 19 பெண்களும் உள்ளடங்குவதாகவும் வவுனியா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் பவானி பசுபதிராஜா கூறினார்.

வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் பலர் கால்கள் இழந்த நிலையில் காணப்பட்டதாகவும்;, இதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்படலாமெனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply