ரிவிர ஆசிரியர் மீது இன்று காலையில் தாக்குதல் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ரிவிர பத்திரிகையின் ஆசிரியரும் அவரது மனைவியும் இன்று (23) காலையில் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகினர்.இந்தச் சம்பவம் இன்று காலையில் கம்பஹா பிரதேசத்தின் இம்புல்கொடவில் இடம் பெற்றுள்ளது.
ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன், அவரது பாரியார் ஆகியோர் தமது காரில் இம்புல்கொட பிரதேசத்தின் ஊடாக வந்து கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகினர்.

உபாலி தென்னக்கோன் தனது காரின் வேகத்தைக் குறைத்தபோது திடீரென அவரது காரைச் சூழ்ந்து கொண்ட குழுவினர் காரின் கண்ணாடியை உடைத்து ரிவிர ஆசிரியர் மீது பொல்லுகளால் தாக்குதலை நடத்தினர். தனது கணவனைக் காப்பாற்ற முயற்சித்த அவரது மனைவியும் இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் மோட்டார் சைக்கிளிலேயே வந்தவர்களாவர். தாக்குதலை நடத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தற்போது இவர்கள் இருவரும் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதல் குறித்த உடனடி விசாரணையை மெற்கொள்ளும் வகையில் பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply