இலங்கையில் போர்நிறுத்தம்: கருணாநிதி இறுதிக் கோரிக்கை

இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்திய மத்திய அரசாங்கத்திடம் இறுதிக் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி, அரசியல் தீர்வொன்றை முன்வைக்க மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும். இது எமது இறுதிக் கோரிக்கை” என கருணாநிதி இன்று சட்டசபையில் கூறினார்.

இந்தக் கோரிக்கைக்கும் மத்திய அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால் இலங்கை விடயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய குழுக் கூடித் தீர்மானிக்கும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டார்.

தமது கட்சி ஆட்சியிலிருந்து விலகினால்தான் இலங்கையில் தமிழீழம் மலரும் என்றால், ஆட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும், தி.மு.க.வின் இந்த அறிவிப்புக்கள் வெறும் கண்துடைப்புக்களேயெனக் கூறி அ.தி.மு.க., ம.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply