கிழக்கில் அபிவிருத்தி, வடக்கில் இராணுவ வெற்றி: ஜனாதிபதியிடம் பெருமைப்பட்டார் அகாஸி
இலங்கைக்கான ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூஸி அகாஸி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று காலையில் சந்தித்துப் பேசினார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டமை, வடக்கில் இடம்பெறும் யுத்தத்தில் படையினர் கண்டுள்ள முன்னேற்றம் போன்றன பாரிய வெற்றியாகுமென ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டவுடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும.
இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சுதந்திரம், உரிமை போன்றன பாதுகாக்கப்படுமெனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply