கல்மடுகுளம் அணைக்கட்டு புலிகளால் இன்று தகர்ப்பு: சில பகுதிகள் நீரில் மூழ்கின
விஸ்வமடுவிலுள்ள கல்மடுகுளம் அணைக்கட்டினை புலிகள் இன்று குண்டு வைத்துத் தகர்த்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.மிகச் சக்திவாய்ந்த குண்டுகள் மூலமே இந்தப் பாரிய அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.
இந்த அணைக்கட்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதன் காரணமாக ஏ-35 வீதியின் ஒரு பகுதியும் பரந்தன்- பூநகரி பிரதான பாதை மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply