வடக்கில் புலி வேட்டை முற்றுப் பெற்றதும் பௌத்த கலாசார பாதுகாப்புப் பணி ஆரம்பமாம்:எல்லாவல மேதானந்த தேரர்

கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டது. வடக்கும் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் விரைவில் வந்துவிடும். இந்த நிலையில் எம் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த இருமாகாணங்களிலும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதே அந்தப் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு கூறுகிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்.

மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை நேற்றுச்  சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.

வடக்கில்; அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. மகாநாயக்க தேரருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply