காத்தான்குடியில் முஸ்லிம் வர்த்தகரைக் காணவில்லை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது
காத்தான்குடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
வர்த்தகரும், சமூக சேவையாளருமான ஏ.எல்.எம்.நசார் (38) நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காணாமல் போயுள்ளார். காத்தான்குடி, முதலாம் குறிச்சியிலுள்ள தனது காணிக்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணியில் மோட்டார் சைக்கிள் காணப்படுகின்றபோதும், அவர் காணாமல் போயிருப்பதாக காத்தான்குடி செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
தாத்தான்குடி வர்த்தக சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய காத்தான்குடியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருப்பதுடன், மட்டக்களப்பு நகரிலுள்ள காத்தான்குடி வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply