இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வரவுள்ளதாக பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம ஆகியோரைச் சந்தித்து வட பகுதியின் தற்போதைய நிலை குறித்தப் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தவுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வரவுள்ளதாகவும் பி.ரி.ஐ செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயம் தொடர்பாக லங்கா ஈ நியூஸ் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பிரணாப்பின் விஜயத்தை உறுதிப்படுத்தியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply