ஊடகவியலாளர்களைத் தாக்கிய குழு விரைவில் பிடிபடும்: கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் குழு விரைவில் பிடிக்கப்பட்டுவிடுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 
 
தற்பொழுது நாட்டுக்குக் கிடைத்துவரும் இராணுவ வெற்றிகளை மழுங்கடிக்கச் செய்யும் நோக்கில் செயற்பட்டுவரும் ஒரு குழுவே, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இந்தக் குழுவி விரைவில் பிடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இனந்தெரியாத இந்தக் குழு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
வெள்ளைவான் கடத்தல்களும் அரசாங்கத்தாலேயே மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் அரசாங்கம் செய்யவில்லை, பிறிதொரு இனந்தெரியாத பாதாள உலகக் குழுவினரும், முன்னாள் தமிழ் ஆயுதக் குழுவினருமே இவற்றைச் செய்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

உண்மை என்ன என்பதை சர்வதேசம் நன்கு அறிந்திருப்பதுடன், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனவும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply