திட்டமிட்டபடி பெப்ரவரியில் ஏ-9 வீதி திறக்கப்படும் – அமைச்சர் ரி.பி.எக்கநாயக்கா தெரிவித்தார்
திட்டமிட்டபடி ஏ-9 வீதி பெப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்கா தெரிவித்தார்.சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் இந்த வீதி முழுமையாகப் புனரமைப்புச் செய்யப்பட்டதால் ஒப்பீட்டு ரீதியில் அந்த வீதி நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே இந்த வீதி பழுதடைந்து காணப்படுகிறது. இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினருடன் இணைந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் திருத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஏ௯ வீதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்தப் பணிகளும் விரைவில் முடிவடைந்துவிடும் என்பதால், வீதியைத் திறப்பதில் தாமதம் ஏற்படாது என்றும் அமைச்சர் எக்கநாயக்க விளக்கினார்.
துரித அபிவிருத்தியை இலக்காக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் பல நெடுஞ்சாலைகள் மற்றும் 18 பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்துள்ளன. எனவே ஏ-9 வீதி திறக்கப்படுதை ஒரு நாள் கூட நாம் தாமதம் செய்யமாட்டோம் என்றார் அமைச்சர்.
2009 வருடப்பிறப்பன்று பரந்தன் பிரதேசத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் அடுத்த சில தினங்களில் ஆனையிறவு, முகமாலை, பளை உள்ளிட்ட பிரதேசங்களையும் கைப்பற்றி ஓமந்தை முதல் முகமாலை வரையில் ஏ-9 வீதியை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இதன் பின்னர் இந்த வீதி பெப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று முன்னதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply