கருணா அம்மானுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராசையா இளந்திரையன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. கனடாவிலுள்ள இவரது நெருங்கிய உறவினர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின்படி இம்மாதம் மூன்றாம் திகதியளவில் இவரும் இவரது மெய்ப்பாதுகாவலர்கள் நால்வரும் புலிகளின் உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.

பெரும்பாலும் கருணா அம்மானுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என நம்பப்படுவதுடன் இவர்கள் இப்போதும் உயிரோடிருக்கிறார்களா என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இராசையா இளந்திரையன் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

நன்றி தேனீ

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply