இலங்கைத் தமிழ் மக்கள் நலன் குறித்தான பொறுப்புகளை ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒப்படைப்பதே சிறந்தது:பிரணாப் முகர்ஜி
புலிகளுக்கெதிரான அண்மைக்கால இராணுவ வெற்றிகள் இலங்கையின் வடக்கே இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு அரசியல் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள்; இந்திய இலங்கை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்; தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.
இலங்கையின் வடமாகாணத்தின் மீள் கட்டுமாண பணிகளில் பங்கேற்பதற்கும் அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளை உள்ளடக்கிய வகையிலான ஒரு நிரந்தர சமாதானத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை இடவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் இச்சந்திப்பின்போது முகர்ஜி தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள், அபிவிருத்திகள் தொடர்பான ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் இருதரப்புக்குமிடையே மிகுந்த புரிந்துணர்வுடனும் சிநேகபூர்வமாகவும் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்று செய்து கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த முகர்ஜி பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்தியாவின் கரிசணை அப்பாவிப் பொதுமக்கள் குறித்தேயாகும் என்றும் அவர்களது நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே விடுவதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply