முதல்வர் கருணாநிதி சொன்னால்தான் விடுதலைப்புலிகள் கேட்பார்கள்:அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று முதல்வர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

அ. தி. மு. க. தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இலங்கை வர வேண்டும் என்றும், பிடித்து வைத்துள்ள தமிழர்களை விடு விக்கும்படி விடுதலைப் புலிகளை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப் புலிகள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக் கியமானதாகும்.

கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப் புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம் என்று ஜெயலலிதா கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply