இராணுவ வெற்றிகள் மூலம் இயல்பு நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு:இந்திய வெளிவிவகார அமைச்சர் முகர்ஜி நம்பிக்கை

இராணுவ வெற்றிகள் மூலம் வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறதென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் மாலை இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அன்றைய தினமே ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார்.

இருவரும் கலந்துரையாடியது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை மிக விரைவில் நடைமுறை ப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த கூறினார். அதேநேரம், அதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுயோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முகர்ஜி கூறினார்.

சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இலங்கை சம்பந்தமாக தெரிவித்துக்கொண்ட விடயங்களையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகள் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவுகள், பரஸ்பர அக்கறையுள்ள பிராந்திய விடயங்கள் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இலங்கை-இந்திய உறவுகள் மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எமது உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து தான் கொண்டுள்ள நம்பிக்கைகளை இலங்கை ஜனாதிபதி விளக்கினார். வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை வழங்க இராணுவ வெற்றிகள் வழிவகுத்துள்ளன. 23 வருடகால மோதல்களின் பின் இந்த நிலை தோன் றியிருப்பதாக நான் தெளிவுபடுத்தினேன்.

இலங்கை ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தன் மனநிலையும் இதுவே என்று கூறினார். இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சகல இலங்கைய ரும் குறிப்பாக மோதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கையை மேற் கொள்ள எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக் களையும் வழங்குவோம்.

இந்த வகையில் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்ப நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதிக்குக் கூறினேன். இதன்மூலம் யுத்தத்தின் அழிவுகளிலிருந்து விடுபட்டு உறுதியான சமாதானத்துக் கான பொருளாதார மற்றும் அரசியல் அடித்தளங்களை இடுவதன் மூலம் சகல சமூகங்களும் நிம்மதி யாக வாழும் சூழலை ஏற்படுத்த முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும்.

இதனடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படும் இடங்களில் புனரமைப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயற்பட வுள்ளோம். இந்திய அனு சரணையுடன் 500 மெகாவோட் மின் உற்பத்தி திட்டம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு நான் மகிழ்க்சியடைகின்றேன்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை மிக விரைவில் அமுல் செய்யப் போவதாகவும் இலங்கை ஜனாதிபதி கூறினார். இது 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகின்றார்.

மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம். மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை மதித்து நடக்கப் போவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும்.

எமது கலந்துரையாடலின் பின் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. கரு ணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்புவிடுத்துள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக விரைவில் இயல்பு நிலையையும், ஜனநாய கத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது, சமாத னத்தையும் ஸ்திரப்பாட்டையும் நிலைநிறுத்துவதில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.

இந்த இலக்கை அடைய இந்தியா சகலரோடும் இணைந்து சகல வழிகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply