மழையுடன் கூடிய மோசமான காலநிலையிலும் தொடரும் வன்னி மோதல்
வன்னியில் நிலவும் மழையுடன் கூடிய மோசமான காலநிலையிலும் இரண்டு தரப்புக்குமிடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி முன்னரங்கப் பகுதியில் மோதலில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரின் விசேட படையணி௧ மணியங்குளம்-திருமுறிகண்டி வீதியிலிருந்து வடக்கு நோக்கி 5 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத்தினரின் 582வது படையணி நாச்சிக்குடா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் மோதல்களில் ஈடுபட்டதாகவும், குஞ்சுக்குளம் வடக்கில் சிறு பகுதியை அவர்கள் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை புலி உறுப்பினர்கள் மூவரின் சடலங்களையும், ரி௫6 ரக துப்பாக்கிகளையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்குமிடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற போதும் இரு தரப்பிலிருந்தும் உண்மையான இழப்பு விபரங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply