ஈ.பி.டி.பி யினரால் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரம்! வன்னி மக்களின் அவலங்களுக்கு யார் காரணம்

எம் இனிய மக்களே!…..

நாம் சமாதான தேசத்தையே விரும்புகின்றோம்! அமைதியையும் யுத்தமற்ற சூழலையும, அச்சமற்ற உயிர்வாழ்வையும, அரசியலுரிமை சுதந்திரத்தையும் நேசிக்கின்றோம்!

ஆனாலும் சமாதானத்திற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தமது அடங்காத அருவருப்பான யுத்த வெறியினால் சரிவரப்பயன்படுத்த தவறிய புலித்தலமை எமது மக்களாகிய உங்கள் மீது அச்சம் தரும் வாழ்வையும, அவலம் தரும் சூழலையும் மட்டுமே சுமையாக சுமத்தியிருக்கின்றது.இதனால் இன்று எமது வன்னி வாழ் உறவுகள் போரவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

புலித்தலைமை மாவிலாறு அணைக்கட்டை மூடிவிட்டதன் மூலம் கிழக்கில் ஒரு பாரிய யத்த களத்தை திறந்து விட்டிருந்தது. இதனால் புலித்தலைமை கிழக்கு மண்ணை முற்றாக இழந்து இன்று வடக்கிலும் தமது கட்டுப்பாட்டு நிலங்களை இழந்து வருகின்றது. கிழக்கு மண்ணை பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த போது புலித்தலமைமையின் அச்சுறுத்தலையும் கருத்தில் எடுக்காமல் கிழக்கு வாழ் எமது மக்கள் புலித்தலமையின் பலாத்காரப்படிக்குள் இருந்து வெளியேறியிருந்தனர்.

இதுபோலவே இன்று வன்னியில் புலித்தலைமையின் கட்டுப்பாட்டு பிரதேசம் என எஞ்சியிருக்கும் இடங்களில் இருந்தும் எமது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருவதற்கு விரும்புகின்றார்கள்.ஆனாலும் புலித்தலைமை அப்பாவி மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்திதமது உயிர்களையும், இருப்பபையும் தக்க வைப்பதற்காக எமது மக்களின் வெளியேற்றத்தை தடுத்து வருகின்றார்கள்.

வன்னி வாழ் எமது உறவுகளின் குடியிருப்புகளின் மத்தியில் நின்று பாதுகாப்பு படையினர் மீது புலித்தலைமை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. இதனால் படையினர் திருப்பி தாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் புலித்தலைமை எதிர்பார்க்கின்றது. அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து உலக நாடுகளில் முன்பாக ஒப்பாரி வைத்து புலித்தலைமை யுத்த நிறுத்தம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தமது இருப்பை பாதுகாப்பதற்கு முயற்சித்து வருகின்றது.புலித்தலமையின் சுயலாப அரசியல் இருப்பிற்காக அப்பாவி மக்கள் பலியாவதை நாம் ஏற்க முடியுமா?…

புரிந்துணர்வு ஓப்பந்த காலத்தில் போரை தொடங்க ஆணையிடு தலைவா என்று அப்பாவி மக்களின் கைகளில் சுலோகங்களை கொடுத்து, அவர்களை பலாத்காரமாக வீதிக்கு இழுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்த தூண்டி விட்டிருந்தவர்கள் புலித்தலைமையினர்.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பக்க துணையாக இருந்து செயற்பட்டிருந்ததை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இதனால் அப்பாவி மக்களே அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் நடக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஆற்றியிருந்த தனது ஆரம்ப உரையிலேயே யாழ் குடாநாட்டில் உள்ள நாற்பதினாயிரம் படையினருக்கும் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என யுத்தத்தை தூண்டி விடும் வகையில் கருத்து கூறியிருந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் சீறும் படை என்றும், சிறுத்தை படை என்றம், பொங்கி எழும் மக்கள் படை என்றும், எல்லாளன் படை என்றும, போர் எழுச்சி குழு என்றும் குழுக்களை அமைத்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்மைப்பினரும் புலித்தலைமையின் பிரதான பங்காளிகளாக செயற்பட்டிருக்கின்றார்கள்.இதன் விளைவுகள்தன் இன்று வரை நடந்து வரும் அழிவுகளும், அவலங்களும். வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் எமது வன்னி வாழ் உறவுகள் வருவதை புலித்தலைமையே தடுத்து வருகின்றது. இந்த உண்மையை புலிகளின் பாலத்காரப்பிடிக்குள் இருந்து கட்டம் கட்டமாக தப்பித்து வந்த எமது மக்களே ஆதாரத்துடன் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆகவே இன்று வன்னியில் புலித்தலமையின் பலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களின் அவலங்களுங்கு புலித்தலமையும்,அவர்களது எடுபிடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருமே காரணம் என்பதை மக்களாகிய நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

எய்தவர்கள் இருக்க அம்பை நோக முடியாது! எமது வன்னி வாழ் உறவுகளின் அவலங்களுக்கு காரணமாக இருக்கும் புலித்தலைமையினரையும் அவர்களது எடுபடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் நோக்கி எமது குரல்களை எழுப்புவோம்!

வன்னியில் அவலங்களுக்குள் சிறையிருக்கும் எமது உறவுகளை
புலித்தலைமையின் பலாத்காரப்பிடிக்குள் இருந்து மீட்டெடுப்போம்!
அவர்களது உயிர்வாழும் உரிமைக்காக குரல் கொடுப்போம்!

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply