அபிவிருத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல் தரப்பினர் எவ்வாறான நிலைப்பாடுகளை வெளியிட்டு வந்த போதும் இலங்கையினுள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
வடக்கில் மீள்குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லக் கூடிய சந்தர்ப்பங்களை அக்காசி இதன்போது விளக்கியுள்ளார்.
அது நாட்டினுள் சமாதானம், மற்றும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும், ஜப்பான் விசேட பிரதிநிதி தமது கருத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply