கச்சத்தீவை மீளப் பெறும் எண்ணம் இல்லை
கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெறும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுகள் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் இதனைத் தெரிவித்திருப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெளிங்டன் பாதுகாப்பு பயிற்சி முகாமில் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் இருவர் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ரஞ்சன் மாத்தாய் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும்இ கச்சத்தீவின் அதிகாரம் 1974ம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அதனை மீளப்பெறும் எண்ணம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply