புலிகள் கவசங்களாக வைத்துள்ள பொதுமக்களை 48 மணிநேரத்துக்குள் விடுவிக்க வேண்டும் என அரசாங்கம் காலக்கெடு
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இருக்கும் பொதுமக்களை 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அவர்களுடைய சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துப் பொதுமக்களும் பாதுகாப்பான ஒரு சூழ்நிலைக்குள் வருவதற்கான அச்சமற்ற பாதைக்கு நான் உத்தரவாதம் வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில், குறிப்பாக முரண்பாட்டுப் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறினால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்த நாட்டின் அனைத்துப் பொதுமக்களுக்கும் சமாதானமும், சுதந்திரமும், உரிமைகளும் கிடைக்கச்செய்வேன் என்று தமது அறிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply