அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று (27) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இக் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானவேளை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா இரு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply