இலங்கை அகதியான மருத்துவ மாணவரின் மனு நிராகரிப்பு
இலங்கை அகதியான மருத்துவ மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு மருத்துவப் பரீட்சையில் இரண்டு பாடங்களில் இந்த மாணவர் சித்தியெய்தவில்லை.
எனினும் தமது விடைத்தாள்களை பரீட்சித்த வெளியார் சிலர் தாம் குறித்த இரண்டு பாடங்களிலும் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இரண்டு பாடங்களில் பெறுபேறுகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்று இலங்கை அகதி மாணவர் மன்றில் கோரியிருந்தார்.
எனினும் ரீபட்சை மேற்பார்வையாளர்கள் அல்லாதவர்கள் கூறும் கருத்தைகொண்டு பரீட்சை முடிவுகளை மாற்றியமைக்கமுடியாது என்று சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மாணவர், மீனம்பாக்கம் வானூர்தி நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டவா என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply