மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தின் 22 சந்தேகநபர்கள் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஏனைய ஐந்து சந்தேகநபர்களை கைது செய்யுமாறு இந்த வழக்கின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நீதவான் ரங்க திஸாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply