செங்கல்பட்டு முகாமிலுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில், இலங்கைத் தமிழ் அகதிகளான பராபரன், தி.சதீஷ், வி.சதீஷ், சண்முகநாதன், சேகரன், விக்னேஷ்வரன், டிஸ்கி முகமது உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இவர்களில் செந்தூரனின் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. செந்தூரனை வைகோ நேரில் சென்று பார்த்தார். மேலும் மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 7 அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பராபரன், தி.சதீஷ் வி.சதீஷ், சண்முகநாதன், சேகரன், விக்னேஷ்வரன், டிஸ்கி முகமது ஆகியோர் இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூ பிரிவு பொலிஸாரின் பரிந்துரைப்படி இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply