இந்தியா அல்ல! சீனாவே நட்பு நாடு
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ பயிற்சியினை இந்தியா வங்குவது குறித்த விடயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையினை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி விடுத்துள்ளார்.
நேற்று இந்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் எம் எம் பல்லம் ராஜூ தெரிவித்த கருத்துக்களை அடுத்தே இந்த கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் தாம்பரம் வானுர்தி முகாமில் ஒன்பது இலங்கை வான்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது தமிழக கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அதிகாரிகளின் பயிற்சினை பெங்களூர் முகாமிற்கு மாற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் இலங்கையை இந்தியா நட்பு நாடு என எந்த வகையில் கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, இந்தியாவை விட சீனா பக்கமே இலங்கை அதிக அளவில் சாய்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மீண்டும் கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply