அவுஸ்திரேலியா செல்ல முயன்று கைதானோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 138 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் பிணை கோரி தமது சட்டத்தரணி வழியாக முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அதனை நிராகரித்து இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 75 பேரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கல்பிட்டியில் கைது செய்யப்பட்ட 63 பேரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இக்குழுக்களில் காணப்பட்ட 5 சிறார்களை விடுதலை செய்ய நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply