அகதிகள் தொடர்பான புதிய சட்டத்தை அமுல்படுத்த கால அவகாசம் கேட்கிறார் கிறிஸ் போவன்

அகதிகள் தொடர்பான புதிய சட்டத்தை அமுல்படுத்த கால அவகாசம் தேவைப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற நாடுகளிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் அகதிகளை பசுபிக் தீவுகளில் முகாம்களை அமைத்து தங்க வைப்பது தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த சில காலம் செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பபுவா நியூகினியா மற்றும் நௌரு தீவுகளில் அகதிகளை தங்க வைப்பது தொடர்பான சட்டம் அண்மையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த முடியாது என குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.புதிய சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply