முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலய மிருகபலி தொடர்பாக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு கடிதம்
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள மிருகபலி பூஜையை ரத்து செய்யுமாறு உத்தரவிட கோரி, ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு கடிதம்
ஒன்றை அனுப்பியுள்ளதாக கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த பூஜையை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிடுவாராக இருந்தால், அதனை நிறுத்த தயார் என்று, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு காளிமுத்து
சிவபாதசுந்தரம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்தே, ஒமல்பே தேரர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.எதிர்வரும் முதலாம் திகதி கௌத்தம புத்தரின் தந்த தாதுக்கள் வடமேல் மாகாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது
அதே தினத்தில் இந்த மிருகபலி பூஜையை நடத்தப்படுவது, பாவச் செயல் என்று ஒமல்பே தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply