ஒபாமாவுடன் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் தெரிவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 6-ந் திகதி நடைபெறுகிறது. அதில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக புளோரிடா மாகாணம் தம்பாவில் அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மிட் ரோம்னி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,144 பிரதிநிதிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்தது. மாநாட்டில் இன்று ஏற்புரை நிகழ்த்திய பிறகு, ரோம்னியின் தேர்வு அதிகாரப்பூர்வமாகி விடும். அன்பிறகுதான், தேர்தல் நிதியை அவர் செலவழிக்க முடியும்.
65 வயதான மிட் ரோம்னி, மசாசுசெட்ஸ் மாகாண கவர்னராக இருந்தவர் ஆவர். இந்த மாநாட்டில், துணை ஜனாதிபதி வேட்பாளராக பால் ரியான் தேர்வு செய்யப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply