சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் கோங்லீ நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

சீனாவின் உயர்மட்டப் பாதுகாப்பு தரப்பினர் 25 பேருடன் நேற்று இலங்கை வந்த அவர், அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், சப்புகஷ்கந்த பாதுகாப்பு கல்லூரியில், சீன பாதுகாப்பு அமைச்சர் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் காலி, ஹம்பந்தொட்டை மாவட்டங்களுக்கும் இந்த குழுவினர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இலங்கை இராணுவ அபிவிருத்திக்காக சீனா 100 மில்லியன் டொலர்களை வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply