முல்லைத்தீவில் 852 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து போரினால் இடம்பெயர்ந்த சுமார் 852 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இன்னமும் மீளக்குடிய மர்த்தப்படாமல் மெனிக் பாம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்றில் அம்பலவன் பொக்கணையில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேரும், முள்ளிவாய்க்கால் மேற்கில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேரும், கேப்பாப்புலவில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மந்துவில் பகுதியில் 241 குடும்பகளைச் சேர்ந்த 796 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 394 பேரும் வேணாவில் பகுதியில் 181 குடும்பளைச் சேர்ந்த 665 பேரும் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் என்று முல்லைத்தீவு செயலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply