நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சாம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை தொடர்பான கற்றறிவாளர் சமூக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி உதித குணசேகர தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கலவான ருவான் ஹோட்டலில் 2012-09-01ம் திகதி அன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, சப்ரகமுவ மாகாண சபை ஐமசுமு வேட்பாளர் சமிந்த இந்திரபிரிய, கஸ்துரி ஆராச்சி ஆகியோரின் பங்கேற்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் நுகர்வோரை தொடர்புபடுத்தி இந்த தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply