டெசோ தீர்மானங்கள் அடுத்த மாதம் ஐநா செல்கிறது

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்பிக்கும் நோக்கில், திராவிட முன்னேற்றக கழக, பொருளாளர் எம்.கே.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அடுத்த மாத இறுதியில் நியூயோர்க் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் தி.மு.க., முப்பெரும் விழா முடிந்த பின், இந்த பயணம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கு தயாராகும் வகையில், தி.மு.க., இளைஞர் அணியை பலப்படுத்தும் முயற்சியில், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், தீவிரம் காட்டி வருகிறார்.

‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களை, எம்.கே.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, நியூயோர்க் சென்று ஐக்கிய நாடுகள், சபையின் பொதுச்செயலர், பான்கீ மூனிடம் நேரில் வழங்க திட்டமிட்டுள்ளது..

பான் கி மூனை சந்திப்பதற்கு திகதியும், நேரமும் தி.மு.க., சார்பில் கோரப்பட்டுள்ளது.

அவரை சந்திக்க திகதி கிடைக்காத பட்சத்தில், அங்குள்ள உயர் அதிகாரியிடம் தீர்மானம் வழங்கப்படும் என, திமுக தரப்புச் செய்திகள்  தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply