பூந்தமல்லி அகதிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் தொடர்கிறது

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு தொடர் உண்ணாவிரதம் இருந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தூரனையும், மற்ற அகதிகளையும் திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக சார்பில் கடந்த 27 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று (31) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தாயகத்தில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

மாலை 5 மணி அளவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply