இலங்கை – சூடான் பாதுகாப்பு தொடர்பில் உடன்படிக்கை
பாதுகாப்பு தொடர்பில் இலங்கை – சூடான் இடையே இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.
சூடானுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சூடான் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை சூடானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் சூடான் பாதுகாப்பு அமைச்சர், பிரதான பாதுகாப்பு செயலாளர், இராணுவ பிரதானி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சூடான் பாதுகாப்பு கல்லூரிகளுக்குச் சென்ற பாதுகாப்பு செயலாளர், இலங்கை யுத்தத்தின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply