சட்டவிரோத குடியேறிகள் 54 பேரை இந்தோனேஷியாவுக்கு திரும்பியனுப்ப முடிவு

அவுஸ்திரேலியா நோக்கி பாதுகாப்பற்ற படகில் சென்ற சட்டவிரோத குடியேறிகள் 54 பேர் மீண்டும் இந்தோனேஷியாவுக்கு திரும்பியனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு இந்தோனேஷியாவின் ஜாவா தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

அதனையடுத்து, சட்டவிரோத குடியேறிகளை மீட்ட அவுஸ்திரேலிய கரையோரக் காவல்துறையினரும், கடற்படையினரும். அவர்களை கரையேற்றியுள்ளனர்.

குறித்த படகில் 150 பேர் பயணித்ததாகவும், 54 பேரையே மீட்க முடிந்ததாகவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

அதில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் இனத்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட போதும், ஏனைய காணாமல் போனவர்களில் இலங்கையர்களும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முனைந்த 24 பேர் மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத குடியேறிகள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை குற்றவிசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply