ஈரானிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி வருத்தம் தெரிவிப்பு

அணி சேர நாடுகளின் 16வது அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் ஈரான் ஜனாதிபதி மஃமூத் அகமதி நிஜாட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வட மேற்கு ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஜனாதிபதி ஈரானிய அரசாங்கத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

தற்போது, இடம்பெறும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

இது தவிர ஈரானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி, ஈரானிய ஜனாதிபதிக்கு விளக்கம் ஒன்றையும் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாநாட்டிற்கு வந்திருந்த ஈரான் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, ஊடகங்களுக்கு ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார்.

ஜனாதிபதி மற்றும் லெபனான் ஜனாதிபதி மிஷேல் சுலைமானுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இதன் பின்னர் இடம்பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply