உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி கைது
விடுதலை செய்யக்கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் அடைக்கப்பட்டுள்ளார்.
விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இவர் கடந்த மாதம் 6ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.
கடந்த 25 ம் திகதி இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மீண்டும் 27 ம் திகதி முகாமில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் தற்கொலை முயற்சி வழக்கில் செந்தூரனை பூந்தமல்லி பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் பூந்தமல்லி நீதவான் முகமது பரூக் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பிறகு செந்தூரனை பொலிஸார் புழல் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply