இந்தோனேசியா கடலில் தவித்த இலங்கையர்கள் மீட்பு
படகொன்றில் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த போது இந்தோனேசியா கடலில் படகு செயலிழந்து நிர்க்கதியான 43 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய மீனவர்களால் மீட்கப்பட்டபோது இலங்கையர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக இந்தோனேசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர்கள் சென்ற படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அனைவரும் 9 நாட்கள் நடுக்கடலில் தவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் நான்கு பெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் இந்தோனேசிய பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply