தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகிறது ?

மத்திய அரசின் கைப் பொம்மையாக கிழக்கு மாகாண சபை இருக்கக் கூடாது என்பதற்காகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது என்று அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேசத்தின் இலங்கைத்துறை மற்றும் கங்குவேலி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும்போதே சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமை அந்தந்த மாகாண மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்திகளை நிறைவேற்றக்கூடிய ஓரளவு அதிகாரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் 2008 தேர்தலில் தெரிவான கிழக்கு மாகாண சபையை மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளது.

இனியும் மத்திய அரசு கிழக்கு மாகாண சபையைப் பயன்படுத்த அனுமதிக்க விட முடியாது. இதற்காகவே தான் மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பைத் துண்டித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.

அத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையின் ஆட்சி தெரிவு செய்த மக்களுக்காகச் சேவையாற்றவில்லை. மத்திய அரசின் தேவைகளை நிறைவேற்றுவ தற்காகவே மத்திய அரசின் கைப்பொம்மையாகவே பணியாற்றியது. இதனை இனியும் அனுமதிக்க்கூடாது என்ற காரணத்திற்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை களத்தில் குதித்துள்ளது என சம்பந்தன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply