தேர்தல்களுடன் தொடர்புடைய 74 முறைப்பாடுகள் பதிவு
மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்புடைய 74 முறைப்பாடுகள் காவல்துறைத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்ததன் பின்னர் அதனுடன் தொடர்புடைய சுமார் 50பேர் வரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலாசார அமைச்சினால் இன்று நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை தொடர்பில் ஜக்கிய தேசியக் கட்சியினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர்முகப் பரீட்சைக்காக தேர்தல்கள் இடம்பெறும் பிரதேசத்தின் விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு இருந்ததாகவும் இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்த்தனவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply