புகலிடம் தேவைப்படுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார்
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போருக்கு அடைக்கலம் வழங்க முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
புகலிடம் தேவைப்படுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து குடியுரிமை பெற்றுக் கொள்ள முயற்சிப்போருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பாராளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் விண்ணப்பம் செய்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு தொடர்ந்தும் வாய்ப்பளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உலகின் அனைத்து நாடுகளும் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பபுவா நியூகினியா மற்றும் நெரு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply