கிழக்கு மாகாணத்தில் விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் விசேட காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, காவல்துறை மாஅதிபர் என்.கே.இளங்ககோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி தெஹியத்தகண்டிய, ஏறாவூர், அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களுக்கு கூடிய காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பிரதேசங்களில் அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளமையே இதற்கான காரணமாகும்,

கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே, மோதல் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை. நேற்றிரவு தமது 3 தேர்தல் பிரசார காரியாலயங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தாக ஜே.வி.பி. தெரிவித்திருந்தது..

இதுதவிர தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் ஜே.வி.பி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் 7 தேர்தல் காரியாலயங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு தமது அறிக்கையில் சுட்டிக்காட்;டியுள்ளது.

இவ்வாறான நிலையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள பிரதேசங்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் 60 க்கும் அதிகமான அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அனுராதபுரம் மற்றும் கேகாலை மாவட்டங்களில் மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவுகளை எண்ணும் 4 பாடசாலைகள் எதிர்வரும் 11 திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply