ஜனாதிபதி இந்தியா செல்வதற்கு வைகோ எதிர்ப்பு
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும். இனி மதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும்இப்பொழுதே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள். 2014ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சியை பலப்படுத்த வேண்டும். தென்காசி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.
பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள புத்தா 2060வது விழாவுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும் எங்களது வெறுப்பினை காட்ட வேண்டிய சூழல் உருவாகும்.
இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் போராட்டம் நடத்தினால் என்னையும் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய ஜஸ்வந்த சிங் உள்ளிட்ட பல நல்ல தலைவர்கள் உள்ள நிலையில் ராஜபக்ஷவை இந்தியாவுக்கு அழைத்து வருவதாகக் கூறிய சுஷ்மாவை எச்சரிக்கிறேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply