எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் துரிதம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயுடன், மிர்லயிட் என்ற இரசாயண கழவை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருலட்சத்து 35 ஆயிரம் டன் அரேலியன் லைட் எனப்படும், மசகு எண்ணெய், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, எண்ணெய் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஈரான் லைட் என்ற மசகு எண்ணெய்க்கு பதிலாக, அரேபியாவில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமையால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையாளர் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

எனினும் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாயில் மேற்கொள்ளப்படுகின்ற திடீர் திருத்தப்பணிகளாலேயே இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply